Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் அடை செய்வது எப்படி !!!

ஓட்ஸ் அடை
தேவையான  பொருட்கள் :
புழுங்கல் அரிசி  – 1 கப்
ஓட்ஸ்  –  1  கப்
துவரம்பருப்பு  – 1  கப்
பாசிப்பருப்பு – 1 கப்
வெங்காயம் –  6
காய்ந்த மிளகாய் –  8
தேங்காய் துருவல் –   2  டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
oats adai recipe க்கான பட முடிவு
செய்முறை:
முதலில் அரிசி  மற்றும்  பருப்புகளை  தனித்தனியாக  ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர்  இவைகளை  காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்க  வேண்டும் .   இதனுடன் ஊற வைத்த ஓட்ஸை சேர்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து மாவுடன்  நன்கு கலந்து கொள்ள  வேண்டும்.  பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, எடுத்தால் ஓட்ஸ் அடை  தயார் !!!

Categories

Tech |