Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பர் முதல்…. 2 வயதுக்கு மேற்பட்டோருக்கும்…. அரசு அதிரடி….!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை குறித்த கணிப்புகள் குழந்தைகள் மீதான பாதிப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க உள்ள நிலையில் அந்த தடுப்பூசியும் குழந்தைகளுக்கு செலுத்தக் கூடியதாக இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரஞ்சித் குலரிய தெரிவித்துள்ளார்.

Categories

Tech |