Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனின் நிலை என்ன…? அர்ச்சகருக்கு நடந்த விபரீதம்… நிலைகுலைந்த குடும்பம்…!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது கோவில் அர்ச்சகர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன் கோவில் பகுதியில் சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கர சுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுவாமிநாதன், மனைவி மற்றும் தனது மகனுடன் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்பதற்காக நெல்லைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து துக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு சுவாமிநாதன் தனது மகன் சங்கர சுப்பிரமணியன் மற்றும் சகோதரர் திருமலை முத்துக்குமாரசாமி ஆகியோருடன்  இணைந்து தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து அலறி சத்தம் போட்டு உள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த திருமலை முத்துக்குமாரசாமியை  மீட்டு விட்டனர். ஆனால் மற்ற இருவரும் தண்ணீரினால் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து உடனடியாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி இரண்டு பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சுவாமிநாதனை சடலமாக மீட்டு விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவாமிநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் சுவாமிநாதனின் மகனான சங்கர சுப்பிரமணியனை வெகுநேரம் தேடியும் அவர் கிடைக்காததால் அவரின் நிலை என்ன என்பது பற்றி தெரியாமல் அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |