Categories
தேசிய செய்திகள்

ஆற்றை கடந்து தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியர்…. குவியும் பாராட்டு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்பந்த முறை ஊழியராக பணிபுரிந்து வருபவர் மந்திரி குமாரி. இவருக்கு அருகில் உள்ள எட்டு கிராமங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது கைக்குழந்தையுடன் தோளில் தடுப்பூசி பெட்டியை சுமந்து கொண்டு ஆறு காடுகளைக் கடந்து 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார். இவரது சேவை மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Categories

Tech |