Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தினரின் தொந்தரவால்… பெண் எடுத்த விபரீத முடிவு… தஞ்சையில் பரபரப்பு…!!

நிதி நிறுவனத்தினர் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தம்பிக்கோட்டை பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐயப்பன் தனது ஹோட்டலை விரிவாக்கம் செய்வதற்காக 25 லட்ச ரூபாயை நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு காரணமாக நிதி நிறுவனத்திற்கு ஐயப்பனால் முறையாக பணத்தை திரும்ப செலுத்த இயலவில்லை. இதற்கிடையில் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஐயப்பன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நிதி நிறுவனத்திடம் பேசி மாதம் 10 ஆயிரம் ரூபாய் வசூலித்து கொள்ள வேண்டுமென பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஐயப்பன் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நிதி நிறுவனத்தினர் அடிக்கடி வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் இருந்த ஐயப்பனின் தாயார் தமிழரசி என்பவர் தனது வீட்டில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |