விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தின் மூலமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதுவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடுகடலில் பேனர் ஒன்றை வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இச்செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.