Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜா சொன்ன “வலிமை” அப்டேட்….. ரசிகர்கள் ஆவல்…!!!

யுவன் சங்கர் ராஜா சொன்ன “வலிமை” அப்டேட்டை கேட்டு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரபல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அஜித் காவல்துறை அதிகாரியாக மிரட்டும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட கூறி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் படக்குழுவினர் இதுவரை வலிமை படத்தின் எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசும்போது வலிமை படத்தின் முதல் பாடல் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும் இப்படலுக்கு “கும்தா” என்று பெயரிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் ஒரு அம்மா சென்டிமென்ட் பாடல் இருப்பதாகவும் கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா சொன்ன தகவலைக் கேட்டு அஜித் ரசிகர்கள் இப்படத்திற்கான பாடலைக் கேட்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |