அனுஷ்கா, சமந்தா மாதிரி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பிஸியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது.
இருப்பினும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டே தான் வருகிறார்கள். குறிப்பாக அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையாக நடிக்க தெரிந்தால் மட்டுமே அவர்கள் சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியும்.
தென்னிந்திய நடிகைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றியவர்களே இவர்கள் தான். இவர்களுக்கு முன்புவரை நடிகைகள் என்றாலே பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்றும் பாடல் காட்சிகளில் நடனம் ஆடவேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது நடிகை என்றால் நன்றாக நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலைமை மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.