Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் பாட்டிகள் தான் இவர்களுக்கு டார்கெட்… அடுத்தடுத்து அரங்கேறிய கொலை… அச்சத்தில் கிராம மக்கள்…!!!

கேரள மாநிலத்தில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து நகைகளை திருடும் சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த நகை பணம் காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை கட்டச்சேரி அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மூதாட்டியின் வீட்டின் அருகில் இருந்தவர்கள் விடிந்து, நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து பின் பக்க கதவின் வழியே அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வடிந்த நிலையில் மூதாட்டி இறந்து கிடந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகை காணாமல் போனது. இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்தபின், சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |