Categories
உலக செய்திகள்

பெலாரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதார தடை.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, பெலாரஸ் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது.

பெலாரஸ் நாட்டில் கடந்த 27 வருடங்களாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ அதிபராக உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அதிபர் தேர்தல் நடந்த போது முறைகேட்டில் அவர் வெற்றியடைந்தாக சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையில் அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் அதிபரை விமர்சித்ததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே லிதுவேனியா நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

அங்கும் அதிபர் தேர்தலில் முறையாக வெற்றி அடைந்ததாக கூறப்படும் எதிர்க்கட்சி தலைவரை ஆதரித்து எழுதி வந்திருக்கிறார். இந்நிலையில் ஏதென்ஸ் நகரில் அந்த பத்திரிக்கையாளர் எதிர்க்கட்சித் தலைவருடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்பு லிதுவேனியா செல்வதற்காக 171 பயணிகளுடன் விமானத்தில் பயணித்துள்ளார்.

அப்போது திடீரென்று விமானத்தில் வெடி குண்டு இருப்பதாகவும், உடனடியாக தரையிறக்குமாறும் பெலாரஸ் நாட்டின் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து, விமானிக்கு அவசர தகவல் கிடைத்ததால், உடனடியாக அவசரமாக விமானம் பெலாரஸ் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

அதன் பின்பு, அங்கு வந்த காவல்துறையினர் அந்த பத்திரிகையாளரையும், உடனிருந்த பெண்ணையும் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது அந்த பத்திரிகையாளர் தனக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்று சத்தம் போட்டுள்ளார். அதிபர் உத்தரவிட்டதால் இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இந்த செயலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த நடவடிக்கைக்காக பெலாரஸ் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது.

Categories

Tech |