தாயார் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பருவதராஜபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தாயார் கடந்த 19-ஆம் தேதி அன்று உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசன் தாயார் இறந்ததை நினைத்து சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது தாயார் இறந்ததை தாங்கமுடியாத வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.