Categories
தேசிய செய்திகள்

“வருங்கால கணவர் முன்னிலையில்”… 3 பேர் சேர்ந்து இளம் பெண்ணை தாக்கி… செவிலியருக்கு நடந்த கொடூர சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் இளம்பெண் ஒருவரை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணா நதிக்கரையில் இரவு நேரத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அப்பெண்ணின் வருங்கால கணவரை கடுமையாகத் தாக்கி, அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு படகில் ஏறி அங்கிருந்து தப்பித்து விட்டனர். இது குறித்து அப்பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இன்னும் சிறிது நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Categories

Tech |