ராமநாதபுரத்தில் தாசில்தார் ரோந்து பணிக்கு சென்ற போது மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டியவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தாசில்தார் பரணிகுமார் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியிலுள்ள முடுக்கு ரோடில் ஆட்டோ ஒன்று நிலை தடுமாறியதுபோல் வந்துள்ளது. இதனையடுத்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் நடத்திய சோதனையில் 5 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கீழக்கரை காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவரை ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் ஆட்டோ டிரைவரான குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.