Categories
தேசிய செய்திகள்

2.40 லட்சத்திற்கு ஏலம்… இந்த ஒரு மீனுக்கு இவ்வளவு மவுசா..? அப்படி என்ன இருக்கு இதுல…!!!

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஒரு அரிய வகை மீன் சிக்கியது. இந்த மீனை ஒருவர் 2.40 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அதேபோல் நேற்று மீன் பிடித்தபோது ஒரு மிகப் பெரிய மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனை பார்த்த மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த மீன் பிச் என்ற வகையைச் சேர்ந்தது. இதில் அரிய வகை மருத்துவ குணங்கள் உள்ளது.

இந்த மீனில் உள்ள திரவம் மிகப் பெரிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. அந்த காரணத்தினால் இந்த மீனை நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு பலரும் ஏலம் எடுத்தனர். அதில் கடைசியாக அந்த பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி தரகொண்டா என்பவர் 2.40 லட்சத்திற்கு அந்த மீனை வாங்கியுள்ளார். இது அரிய வகை மீன் என்பதால் இதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |