Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்.. போலந்து அரசு அறிவிப்பு..!!

போலந்து அரசு, இங்கிலாந்திலிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

போலந்தில் சமீபத்தில் கொரோனா தொற்று நன்றாக குறையத்தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது.

எனவே போலந்து அரசு, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின்  விமான போக்குவரத்தில் பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது,  இங்கிலாந்து நாட்டிலிருந்து போலந்திற்கு, வரும் மக்கள் ஒருவாரத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

அவர்களிடம், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தாலும் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |