Categories
பல்சுவை வானிலை

3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!!

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில்  அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உட்பட பல பகுதியில் மழை பெய்தது.

Image result for Heavy Rain in tamilnaduஇந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |