Categories
உலக செய்திகள்

அப்பாடி நிம்மதி…. இனி மாஸ்க் போடவே வேண்டாம்…. சுகாதாரத் துறையின் அதிரடி அறிவிப்பு….!!

கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து மக்கள் பொதுவெளிகளில் முக கவசத்தை அணிய வேண்டாம் என்று இத்தாலிய நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இத்தாலிய நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் ஜூன் 28ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முக கவசத்தை அணி வேண்டாம் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் பொதுமக்கள் அதிகமாக கூடியிருக்கும் இடங்களிலும், கொரோனா அதிகமாக பரவியிருக்கும் இடங்களிலும் கட்டாயமாக அனைவரும் முக கவசத்தை அணிய வேண்டும் என்றும் இத்தாலிய நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இத்தாலிய நாட்டிலிருக்கும் பொதுமக்களில் 52 சதவீதத்திற்கும் மேலானோர் குறைந்தபட்சமாக ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |