தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்று கேட்கும் மாணவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் மாற்றுச் சான்று வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. சீருடை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் செலுத்த வற்புறுத்தக் கூடாது. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் விவரங்களை இஎம்ஐஎஸ் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.