தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சில பள்ளிகள் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்தால் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் புதிய சிக்கன் உருவாகிறது. இதனை அடுத்து தமிழக அரசின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு அனைத்து மாணவர்களின் தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் மாணவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதால்,ஆதார் மூலம் மாணவர்களின் தகவல்களை பெற்று அரசு பள்ளிகளில் புதிய மாற்றுச் சான்றிதழை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.