Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஜூன் 25 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை அடுத்து இரண்டாம் தவணை 2,000 ரூபாயும் 14 வகையான மளிகைப் பொருள்களும் இந்த மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூன் 25ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை 2,000 ரூபாயும், 14 வகையான மளிகைப் பொருள்களும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |