ஆன்லைனில் ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்ததற்கு பதிலாக பார்லே ஜி பிஸ்கெட் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நாம் ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்து ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக வேறு ஒரு பொருள் வருகின்றது. இதேபோன்றுதான் ஒருமுறை மவுத்வாஷ் ஆர்டர் செய்ததற்கு ரெட்மி நோட் செல்போன் வந்திருந்தது. அதேபோல் செல் போன் ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக வெங்காயம் வந்திருந்தது. தற்போது ரிமோட் கண்ட்ரோல் கார்க்கு பதிலாக பிஸ்கட் வந்துள்ளது.
டெல்லி, பகவான் நகரை சேர்ந்த விக்ரம் என்பவர் தனது குழந்தைகளுக்காக ஆன்லைன் வர்த்தகமான அமேசான் நிறுவனத்தில் ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். இதையடுத்து நேற்று டெலிவரி வந்த பார்சலை திறந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலுக்குள் பார்லே ஜி பிஸ்கெட் இருந்தது. இதையடுத்து அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் பணத்தை திரும்பி வருவதாகவும், அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளதாக விக்ரம் தெரிவித்தார்.