Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் சிறுமி…. தூக்கி வீசப்படும் பகீர் வீடியோ… வெளியான சிசிடிவி காட்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மாடியிலிருந்து அவரை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு மிகவும் அச்சம் கொள்கின்றனர். பெண் பிள்ளைகள் வெளியில் சென்று வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்புவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறிவிட்டது. அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் அரங்கேறி வருகின்றது.

https://twitter.com/AnujaJaiswalTOI/status/1407534658535837697

அதுபோன்று உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் நேற்று இரவு 17 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். இதைக் கண்ட சிறுமியின் தந்தை கூச்சலிட அவர்கள் சிறுமியை தூக்கி வீசியுள்ளனர். இதில் சிறுமியின் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மூன்று இளைஞர்களில் இளைஞர்களை கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |