Categories
உலக செய்திகள்

தாயாரின் சிலை திறப்பு விழா..! மகனுடன் லண்டன் பயணிக்கும் இளவரசர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

இளவரசர் ஹரி தனது தாயார் டயானாவின் சிலை திறப்பு விழாவிற்கு மகன் ஆர்ச்சியை அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்சிங்டன் அரண்மனையில் உள்ள இளவரசி டயானாவின் உருவச்சிலை வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு திறக்கப்பட உள்ளதால் இரண்டாவது முறையாக இளவரசர் ஹரி மீண்டும் பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளார். பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு தனியாக சென்றிருந்த இளவரசர் ஹரி இந்த முறை அவரது மகன் ஆர்ச்சியையும் உடன் அழைத்து செல்ல இருப்பதாக ராயல் நிபுணர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இளவரசர் ஹரி ராயல் குடும்பத்துடன் சமாதானம் செய்து கொள்வதற்கான முயற்சியை தொடங்குவதற்காக பிரித்தானியாவிற்கு அவரது மகன் ஆர்ச்சியையும் உடன் அழைத்து வருவார் என்று ராயல் நிபுணர் டங்கன் லார்கோம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் கூறிய சில கூற்றுகளால் தொடர்ந்து பதற்றம் இருந்து வரும் நிலையில் இளவரசர் ஹரி, தனது மகன் ஆரச்சியை பிரித்தானியாவிற்கு அழைத்து செல்வது அந்த பிளவுகளை குணப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு அங்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆர்ச்சியை பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்வதன் மூலம் பல்வேறு விரிசல்கள் சரியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் மேகன் தனது மகள் லிலிபெட்டுடன் அமெரிக்காவிலும், இளவரசர் ஹரி மகன் ஆர்ச்சியுடன் லண்டனுக்கும் பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |