அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தொடர்புகளை அறிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது வரை ஆன்லைன் வகுப்பு மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலுங்கானா அரசு கூறியுள்ளது. மேலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் டியூஷன் கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் வசூலிக்க வேண்டும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்த 11 தனியார் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டும் அரசாணை 46 அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.