Categories
மாநில செய்திகள்

விழுந்து விழுந்து சிரித்த ஈபிஎஸ், ஸ்டாலின்… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பேசியது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று விவாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை பேசப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்தடை தான் ஏற்பட்டது என்று கூறினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் மின்தடை என்றும், திமுக ஆட்சியில் மின்வெட்டு என்றும் கூறுகிறீர்கள். இது தப்பிப்பதற்காக கூறும் வார்த்தைகள். ஆக மொத்தம் ” பல்பு எரியவில்லை” என நகைச்சுவையாக பேசியதால், ஸ்டாலின், ஈபிஎஸ் என அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Categories

Tech |