Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒருவேளை அப்படி இருக்குமோ…? கொழுந்துவிட்டு எரிந்த மினி லாரி… காவல்துறையினரின் தகவல்…!!

கட்டிட பொருட்களை ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மினி லாரி வைத்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ரவீந்திரன் என்பவர் அந்த மினி லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டிரைவர் ரவீந்திரன் அரியலூரில் கட்டிடம் கட்ட பயன்படுத்தும் பொருள்களை இறக்குமதி செய்துவிட்டு திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி அருகே வந்து கொண்டிருக்கும் போது ரவீந்திரன் தனது  உறவினர் வீடு பக்கத்தில் இருந்ததால் அங்கு செல்வதற்காக எடமலைப்பட்டிப்புதூர் ரயில்வே மேம்பாலத்தின் அடியில்  மினி லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த மினி லாரி திடீரென மதியம்  தீப்பிடித்து எரிந்துள்ளது.

அதனைப் பார்த்த அருகிலிருந்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த மினி லாரியில் நீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றதால் பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  எடமலைப்பட்டிப்புதூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே இடத்தில் ஏராளமான குப்பைகள் கிடந்ததாகவும் அதில் பற்றிய தீ மினி லாரிக்கும் எளிதில் பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |