அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை சுமார் 20 டன் எடையுடைய வெடிகுண்டை கடலின் நடுவே வெடிக்கவைத்து சோதித்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் கடற்கரையில் சுமார் 100 மைல் தூரத்தில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்படையினரின் USS Gerald R Ford (CVN 78) என்ற விமானம் கொண்ட போர்க்கப்பலானது முதலில் அட்லாண்டிக் பெருங்கடலில் முதல் சோதனையை மேற்கொண்டது.
அதாவது, புதிதாக உருவாக்கப்பட்ட கப்பல்களின் அமைப்பை சோதிக்க, நேரடியான போர் வெடிபொருட்களை அமெரிக்க கடற்படை உபயோகிக்கிறது மற்றும் போர் நிலவும் சமயங்களில் உயிர் வாழ்வதற்கான திறனை சரிபார்க்கிறது. மேலும் நீரின் அடியில் வெடிபொருட்களை எதிர்த்து கப்பல்களின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதையும் சோதித்துள்ளது.
https://twitter.com/Warship_78/status/1406601477435576321
இந்த சோதனைக்காக சுமார் 40 ஆயிரம் பவுண்ட் எடையுடைய வெடிமருந்துகள் உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு பின்பு சுமார் 3.9 ரிக்டர் அளவாக நிலநடுக்கம் பதிவானது. இந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க கடற்படை பதிவிட்டுள்ளது.