நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .மெஹரஸைலா என்ற இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, பவதாரணி இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .