அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ அன்னை தெரசா கூறும் அறிவுரைகள் பின்வருமாறு :
கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டுமே அன்னையாக முடியும் !
கருணையுற்றால் ஆயிரம் குழந்தைக்கு கூட அன்னையாக முடியும் !
எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும் ?
கவலையை விடுங்கள் வாழ்க்கையை முதலில் வாழ தொடங்குங்கள் !
மற்றவைகளை எடை போடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள் !
ஏனெனில் அவர்களை நேசிப்பதசொற்களால் ற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும் !
அன்பு செலுத்துங்கள் காலம் மிகக் குறைவாக இருக்கிறது !
அன்பு சொற்களில் வாழ்வதில்லை !
அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது !
செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு !
இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் !
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் !
ஆனால் மன்னிப்பதற்கு தாமதம் கூட செய்யாதே !
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளை விட பெரியது !
புன்னகையே அன்பின் சின்னம் !
புன்னகையே நாம் பிறருக்கு கொடுக்கும் அழகிய பரிசு !
வீழ்ந்தவருக்கு உதவுவதே அன்பான செயலாகும் !
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் !