இன்டிகோ நிறுவனமானது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்த சலுகையால், அதிகமானோர் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வார்கள், இண்டிகோவில் பயணிப்பவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
இந்திய மக்களில் 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தான் இச்சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தான் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் சமயத்தில் தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும். மட்டுமில்லாமல் முன்பதிவு செய்யும்போது மத்திய அரசு அளித்த தடுப்பூசி சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விமான நிலையத்திற்குள் நுழையும் போது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட சான்றிதழ் காட்டப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. மேலும் இருக்கைகள் குறைவாக உள்ளது. எனவே அதன் தேவையை வைத்து தான் தள்ளுபடி அளிக்கப்படும். இந்த சலுகையானது இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்படவில்லை.