கனடா வாழ் தமிழரான சாகேத் என்பவர் கமலுடைய தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் இவர் சமீபத்தில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அபாய கட்டத்தில் உள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இவருடைய தீராத ஆசை கமலுடன் பேச வேண்டும் என்பதுதானாம்
இதனை தன்னுடைய நண்பர்கள் மூலமாக அறிந்த கமலஹாசன் ரசிகர் சாகேத்தை தொடர்புகொண்டு ஜூம் செயலி வழியாக வந்து பேசியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத சாகித் குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அப்போது பேசிய ரசிகர் சாகேத் நான் உங்களுடைய பெரிய ரசிகன் என்பதால் நான் என்னுடைய மகனுக்கு விருமாண்டி என்று பெயரிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.