Categories
மாநில செய்திகள்

காவலர் தாக்கி இறந்த வியாபாரிக்கு… ரூ.10 லட்சம் நிதி… முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு…!!!

காவலர் தாக்கி இறந்த வியாபாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் அறிவித்து இருந்தனர். அதன்படி, காவலர் தாக்கி உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முகஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |