போகிமான் கதாபாத்திரமான பிகாச்சுவின் உருவத்தை கொண்டு ஜப்பானின் ஸ்கைமார்க் விமான சேவை நிறுவனம் தனது விமானத்தை வடிவமைத்து அசத்தியுள்ளது.
போகிமான் அறிமுகமாகி 25 வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு போகிமான் கதாபாத்திரமான பிகாச்சுவின் உருவத்தை கொண்டு ஜப்பானின் ஸ்கைமார்க் விமான சேவை நிறுவனம் தனது விமானத்தை வடிவமைத்து அசத்தியுள்ளது. மேலும் பிகாச்சுவின் உருவங்கள் மற்றும் மஞ்சள் நிற வண்ணங்கள் பூசப்பட்டு டோக்கியோ-ஒகினாவா நகரங்களுக்கு இடையே பறக்கும் போயிங் விமானம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த போகிமான் விமானமானது போகிமான் அறிமுகமாகி 25 வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிகாச்சு உருவ பொம்மைகள் அந்த விமான சேவையின் அறிமுக விழாவில் நடனமாடி அனைவருக்கும் வரவேற்பு அளித்துள்ளது.