கும்பம் ராசி அன்பர்கள்.! சிக்கனம் தேவை.
சிலர் இடையூறு செய்ய முயற்சிகள் மேற்கொள்வார்கள். அதனை முன்கூட்டியே புரிந்து கொண்டு சரிசெய்து கொள்ளவேண்டும். செயல்களில் அதிக தற்காப்பை பின்பற்றவேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
வார்த்தைகளில் தெளிவு வேண்டும். உங்களுடைய நல்ல எண்ணத்தை மற்றவர்கள் தவறாக புரிந்துக் கொள்வார்கள். அதில் சிக்கல்கள் ஏற்படும். காதலில் அவசரப்பட வேண்டாம். மாணவர்களுக்கும் எதையும் சாதிக்கும் துணிச்சல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை