விவசாயி ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கியதற்கு 6 லட்சம் வட்டி என்று கூறியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல தொழில்கள் முடங்கி உள்ள காரணத்தினால், பலரும் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் விடாமல் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தும் படி டார்ச்சர் செய்து வருகின்றனர். அப்படி செழுத்தவில்லை என்றால் வட்டி மேல் வட்டி போட்டு அதிக பணம் வசூல் செய்கின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள சின்ன பாளையப்பட்டு கிராமத்தில் ராமஜெயம் என்னும் விவசாயி வடிவேலு என்ற கந்துவட்டிகாரரிடம் 2018ஆம் ஆண்டு ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். வட்டியை கட்ட முடியாத சூழ்நிலையில் அவரது நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதோடு அசலும் வட்டியும் சேர்த்து ஏழு லட்சம் கேட்டுள்ளார். இதனால் மிகவும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த ராமஜெயம் பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.