Categories
உலக செய்திகள்

அதை யாருமே பார்க்கல..! திடீரென எழும்பிய திமிங்கிலம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்த போது நீரிலிருந்து திடீரென திமிங்கலம் ஒன்று மேலெழும்பியுள்ளது.

மெக்சிகோவில் உள்ள பஜா கலிபோர்னியா பெனின்சுலா அருகே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக சிலர் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படக்கு பின்னால் பெரிய திமிங்கலம் ஒன்று நீரிலிருந்து வெளியில் வந்து மீண்டும் நீருக்குள் சென்றுள்ளது. அதனை புகைப்பட கலைஞரான எரிக் ஜே ஸ்மித் ஒரு படகிலிருந்த படி தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார். அதேசமயம் இன்னொரு பக்கம் படகிலிருந்த சுற்றுலா பயணிகள் கேமராவை கொண்டு தயார் நிலையில் இருந்துள்ளனர். ஆனால் அந்த திமிங்கலம் மற்றொரு பக்கத்திற்கு சென்றுவிட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் எரிக் எடுத்த புகைப்படத்தில் பதிவாகிக் கொண்டே இருந்துள்ளது. இதற்கிடையே எரிக், “தான் மற்றொரு படகில் சில அடி தூரம் தள்ளி இருந்ததாகவும், அப்போது திடீரென மேல் எழும்பிய அந்த திமிங்கலத்தை அனைவரும் பார்ப்பதற்கு முன்னதாகவே தான் புகைப்படம் எடுத்து விட்டதாகவும், மற்றவர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த திமிங்கலம் மீண்டும் நீருக்குள் சென்றுவிட்டது” என்றும் கூறியுள்ளார்.

மேலும் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது லேசான காரியம் இல்லை, அதற்கும் ஒரு அதிர்ஷ்டம் என்பது இருக்க வேண்டும், தயார் நிலையிலும் அலர்ட்டாகவும் இருந்தால் மட்டுமே சரியான புகைப்படம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படமானது ஒரு வருடத்திற்கு பிறகும் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |