தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி தகராறால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பூச்சிதேவர் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐந்து ஆண்டுகள் முன்பு புவனேஸ்வரி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவியிடையே அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோன்ற சண்டைகள் தொடர்ந்து வந்த நிலையில் நேற்று பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றிபோய்யுள்ளது.
இதனால் புவனேஸ்வரி மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விரக்தியடைந்த புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு காவல் துறையினர் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ கௌசல்யாவும் விசாரணை செய்து வருகின்றனர்.