தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்பதால் அதற்கான தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றிய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாஜக அல்லாத பிற மாநில முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.