தினமும் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிச் செல்கிறோம். சில நேரங்களில் நாம் வீட்டிலிருந்து நினைத்துச் செல்லும் காரியம் நடைபெறாமல் இருக்கும் போது மனம் சஞ்சலப்படுகிறது. இதனை சிறு பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். வீட்டிலிருந்து கிளம்பும் காரியம் வெற்றிகரமானதாகவே அமைய வேண்டும் எனில் முதலில் அதற்கேற்ற உழைப்பையும், பங்களிப்பையும் வழங்குவது அவசியம்.
செல்லும் காரியம் சுபமாகவும், வெற்றிகரமாகவும் அமைய கை, கால்கள், உடல் மற்றும் மனத்தூய்மையுடன் இருத்தல் அவசியம். அடுத்ததாக வீட்டை விட்டு கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக சிறிதளவு நாட்டு வெல்லம் உண்டு தண்ணீர் குடிக்கலாம். வெல்லமும் தண்ணீரும் உடனடி சக்தியை உடலுக்கு வழங்குவதுடன் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.
வெற்றியை ஈர்க்கும் விஷயங்கள் பல உண்டு. அவற்றில் மிக முக்கியமானது கிராம்பு. இந்தக் கிராம்பில் சிலவற்றை பணம் வைக்கும் பர்ஸிலோ சட்டை பாக்கெட்டிலோ வைத்து கொள்ளலாம். இதனுடைய நறுமணத்தால் நம்மை சுற்றி எப்போதும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உருவாகும். மேலும் வீட்டு தலைவாசலில் சில குருமிளகினை உதிர்த்துவிட்டு செல்வதும் அவசியம். கெட்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், தீய அதிர்வுகள் இருப்பின் அவை குறுமிளகுடன் வெளியேறிவிடும். பின் தொடர முடியாது மேலும் முழுமுதற் கடவுளான கணபதியை வழிபட்டு “ஓம் கம் கணபதியே நமஹ” எனும் கணபதி மந்திரத்தை உச்சரித்தப்படியே வீட்டிலிருந்து வெளியேறுவதும் ஆன்மீக பாதுகாப்பை வழங்கும் என்பது நம்பிக்கை.
வீட்டிலிருந்து கிளம்பும் போதும், அலுவலகம் அல்லது தொழில் சார்ந்த இடங்கள், சுபகாரியமாக செல்லும் இடங்கள் அனைத்திலும் பிரதான கதவின் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பின்வாசல் வழியாக செல்லுதல் தவறு. அதே போல் வீட்டிற்குள் நுழைந்ததும் கை, கால், முகம் கழுவி வீட்டில் விளக்கேற்றி கடவுளுக்கு நன்றி கூறினாலும் முடிவு அல்லது வெற்றி சாதகமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வெற்றி என்பது வெளிப்புற சூழலை சீரமைப்பதால் மட்டுமல்ல. உழைப்பை பொருத்தே அமைகிறது என்றாலும் சில, இந்த எளிமையான குறிப்புகளை பயன்படுத்துவதால் நம்பிக்கை அதிகரித்து விரைவான சிறப்பான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.