ராயல் நிபுணரான கமிலா டோமினி தனக்கு மேகன் மார்க்கல் ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ராயல் குடும்ப வர்ணனையாளரும், தி டெய்லி டெலிகிராப்பின் இணை ஆசிரியருமான கமிலா டோமினி அரச குடும்பம் மற்றும் அரசியல் பற்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் “திஸ் மார்னிங்” எனும் நிகழ்ச்சியில் பிரதான தொலைக்காட்சி ஒன்றில் அரச செய்திகள் குறித்து சமீபத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் மேகன் மார்க்கல் எழுதிய “தி பெஞ்ச்” என்ற குழந்தைகள் புத்தகத்தை பற்றி அந்த நிகழ்ச்சியில் விமர்சித்து பேசியுள்ளார். மேலும் “ஆர்ச்சி ஒரு தீவிரமான வாசகர்” என்று அந்த புத்தகத்தில் மேகன் எழுதியிருந்த கூற்றை “ஒரு சுவாரசியமான கூற்று இது” என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி வைரலானதையடுத்து, மேகன் மார்க்கல் ரசிகர்களிடமிருந்து இந்த விமர்சனத்தால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கமிலா தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ராயல் நிபுணரான கமிலாவுக்கு F***[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒட்டு மொத்த குடும்பத்துக்கே கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலை ராயல் நிபுணர் கமிலா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவர் “அந்த மிரட்டலை கண்டு தான் ஒருபோதும் கவலைப்பட போவதில்லை என்றும், தனது ஆதரவாளர்களிடம் இருந்து அனுதாபத்தை தான் எதிர்பார்க்கவில்லை” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.