நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் தினமும் 64 ரூபாய் சேமித்தால் இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வரை லாபம் பெறலாம்.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பாலிசியை 25 வருட காலத்திற்கு எடுக்கலாம். உதாரணமாக நீங்கள் 20 ஆண்டுகளுக்கு பாலிசி எடுக்கின்றீர்கள். அப்போது உங்கள் பாலிசி தொகை 4 லட்சம். இதில் முதிர்வு காலம் முடிந்து உங்களுக்கு 7.8 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இப்படிப் பார்க்கையில் நீங்கள் தினமும் ரூ64 சேமித்தால் போதுமானது.