Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்தால் போதும்…. விமான டிக்கெட் தள்ளுபடி…. இண்டிகோ செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் தள்ளுபடி செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை பொருந்தும்.

பயணிகள் தடுப்பூசியை இந்தியாவில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை முன்பதிவு செய்கையில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர விமான நிலையத்திற்குள் செல்லும் போது தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |