Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி தேவைப்படுகிறது. கிராமப்புறங்களில் 44 சதவீதம் பேரிடமும், நகர்ப்புறங்களில் 65 சதவீதம் மட்டுமே ஸ்மார்ட் போன் மற்றும் இணைய வசதி இருக்கிறது. எனவே ஆன்லைன் கல்வி அனைவருக்குமே சென்று சேர்வதில்லை.

ஒரு சில பெற்றோர்கள் கொரோனா பரவலால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழ்நிலையிலும் தங்களுடைய குழந்தைகளின் படிப்பை கருதி மிகுந்த சிரமத்துடன் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஒரு சிலரால் வாங்கி கொடுக்க முடியவில்லை. எனவே அத்தகைய  மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்ப அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில் கிடைத்தவுடன் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியோடு மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்று  கூறப்படுகின்றது.

Categories

Tech |