சுமார் 5.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகநாடுகளுக்கு வழங்கப்போவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை அழிக்கும் பொருட்டு அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சில பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நாடுகளுக்கு அதனை இலவசமாக வழங்கி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்க சுமார் 5.5 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகள் முழுவதும் வழங்கவுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 1 கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அமெரிக்கா, ஆசிய நாடுகளுக்கு மட்டும் வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு ஆசிய நாடுகளுக்கு மட்டும் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒரு பங்கு இந்தியாவிற்கு அளிக்கவுள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.