Categories
உலக செய்திகள்

அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது.. வடகொரிய அதிபரின் சகோதரி அறிக்கை..!!

வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்திருக்கிறார்.

வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க அரசு, வடகொரியா தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கருதுகிறது.

அவர்களின் திருப்திக்காக அப்படி நினைத்துக்கொள்ளலாம். எனினும் அதற்கான  முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டால், ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதைவிட, அந்நாட்டை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கடந்த வாரத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான, ஜேக் சல்லிவன் இரண்டு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலாகத்தான் கிம் யோ ஜாங் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வடகொரியா, தங்கள் அணு ஆயுதத்தை கைவிடுவதாக தெரிவித்தது. ஆனாலும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க டிரம்ப் மறுத்துவிட்டார். எனவே பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.

Categories

Tech |