Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்துருக்கும்…. விசாரணையின் போது நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

விசாரணைக்கு ஆஜரான முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் வேதாசலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிரெடிட் கார்டு மோசடி செய்த வழக்கில் விசாரிப்பதற்காக வேதாச்சலத்தை அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் வங்கி மோசடி பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் பகல் 11 மணி அளவில் வேதாச்சலம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்..

அதன் பின் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் மாலை 4 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரான வேதாச்சலம் அதிகாரி முன்னிலையில் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை அடுத்து வேதாசலத்தை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேதாச்சலம் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |