Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைசி வர அங்க போக முடியல… செவிலியரின் நிறைவேறாத ஆசை… கோவையில் நடந்த சோகம்…!!

வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால் ஆண் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபின் என்ற ஆண் செவிலியர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூபினுக்கும், சன்னி என்ற பெண்ணிற்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சன்னி சென்னையில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற ரூபினின் ஆசை நிறைவேறாமல் இருந்துள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரூபின் வாழ்க்கையை வெறுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் ரூபின் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |