பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், போலி செய்திகளை பரப்பியதாகவும் கூறி கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு எகிப்து நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
எகிப்து நாட்டில் அகமது சமீர் என்னும் மாணவி வசித்து வருகிறார். இவர் வியன்னாவிலிருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை மாணவியாக பயின்று வருகிறார். இதனையடுத்து இவர் தன்னுடைய குடும்பத்தை காண்பதற்காக தனது நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அகமது சமீர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், போலி செய்திகளை பரப்புவதாகவும் கூறி காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளார்கள்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அகமது சமீர் மீதான வழக்கு தொடர்பாக எகிப்திலிருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளார்கள். இதனை தொடர்ந்து அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அகமது சமீருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனையை விதித்துள்ளார்கள்.