தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பல தைராடியான அறிவிப்புகளையும் அறிவித்துள்ளார். பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதையடுத்து சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.