கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய நபரின் வழக்கு அமெரிக்காவிலிருக்கும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால் இந்திய அதிகாரிகள் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் பல பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா என்பவருக்குமிடையே தொடர்புள்ளது என்று இந்தியாவின் மத்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவிலிருக்கும் தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு மத்திய அரசாங்கம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதனை ஏற்ற அமெரிக்கா தஹாவூரை கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி கைது செய்துள்ளது. அதன்பின் அமெரிக்க காவல்துறை அதிகாரிகளால் லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக் கைதியாக தஹாவூர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால் அமெரிக்க நாட்டிற்கு இந்திய அதிகாரிகள் குழு சென்றுள்ளது.